kenya women
kenya womenPT

சென்னை | மது போதையில் பாரில் பிரச்னை.. கென்யா நாட்டை சேர்ந்த 3 பெண்கள் கைது! நடந்தது என்ன?

சென்னையில் மதுபோதையில் பாரில் பிரச்னை செய்த மூன்று கென்யா நாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

சென்னை எழும்பூர் லாங்ஸ் கார்டன் சாலையில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு மது போதையில் வந்த மூன்று கென்யா நாட்டுப் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சாலையில் சென்ற பொது மக்களுக்கும் தொந்தரவு கொடுக்கும் வகையில் அந்த பெண்கள் ஈடுபட்டதால் எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்த மூன்று பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 kenya women
’முதல் முறை.. ஒரு AUS வீரரால் கூட முடியவில்லை!’ - PAK-க்கு எதிராக தேவையற்ற சாதனை படைத்த ஆஸ்திரேலியா!

யார் அந்த 3 பெண்கள்?

போலீஸார் விசாரணையில் மது போதையில் தொந்தரவு செய்த பெண்கள் கென்யா நாட்டை சேர்ந்த விஜினியா, அனஸ்தடியா, போசியா மூவண்டை ஆகியோர் என்பதும், இவர்கள் மருத்துவ காரணத்திற்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக தமிழ்நாட்டிற்கு வந்து தி.நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.

நேற்று ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு பாரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் எழும்பூரில் உள்ள பாருக்கு வந்து உள்ளே அனுமதிக்குமாறு கூறி சுமார் 2 மணி நேரமாக பிரச்சனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து எழும்பூர் போலீசார், மூன்று பெண்கள் மீதும் ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 kenya women
‘இருங்க பாய்..’ - வேகப்பந்தில் மிரட்டிய PAK.. 22 ஆண்டுக்கு பின் AUS மண்ணில் தொடரை கைப்பற்றி வரலாறு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com