வீட்டினுள் புகுந்த லாரி
வீட்டினுள் புகுந்த லாரிpt desk

சென்னை: கட்டுப்பாட்டை இழந்து வீட்டினுள் புகுந்த லாரி – 2 வயது சிறுவன் உட்பட 3 பேர் காயம்

பல்லாவரம் அருகே பின்னோக்கி லாரியை இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், ஓட்டுநர் தப்பியோட்டம்.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் நேற்று ரிவர்ஸ் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி வீட்டினுள் புகுந்ததால் வீடு இடிந்து சேதமானது. இதில் வீட்டின் உரிமையாளர் ஜானகி (50), அவரின் பேரன் சுஜித் (2), உள்ளிட்ட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வீட்டினுள் புகுந்த லாரி
வீட்டினுள் புகுந்த லாரிpt desk
வீட்டினுள் புகுந்த லாரி
திருத்தணி: அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய தூய்மைப் பணியாளர் #ViralVideo

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com