\
கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: பட்டம் விட்ட 3 பேர் கைது!

கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: பட்டம் விட்ட 3 பேர் கைது!

கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்: பட்டம் விட்ட 3 பேர் கைது!
Published on

சென்னை மதுரவாயலில் பட்டம் விட பயன்படுத்தப்பட்ட மாஞ்சா நூல் ஒருவரின் கழுத்தை அறுத்ததில், சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்(56), இவர் நேற்று முன்தினம் மருத்துவமனைக்குச் சென்று தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தார். மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பட்டம் விடப்பட்ட மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த நூருல் அமீன்(40), ராகுல்(26), மற்றும் 17 வயதான சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இதில் நூருல் அமீன் பட்டம் தயார் செய்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களிடம் மேலும் பட்டங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com