சென்னை : 3 தீயணைப்பு வீரர்களுக்கு கொரோனா உறுதி
சென்னையில் 3 தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சென்னையில் மட்டும் அதிக அளவில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 197 பேருக்கு சென்னையில் கொரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக ராயபுரம் பகுதி கொரோனா பாதிப்பில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இராயபுரம், வியாசர்பாடி, கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 தீயணைப்புப்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இவர்கள் அனைவரும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் மருத்துவமனைகள், மாநகராட்சிக் கட்டிடங்கள், பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள் ஆகிய இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூவரும் பேசின் பிரிட்ஜ் பகுதியிலுள்ள தீயணைப்பு வீரர்களுக்கான குடியிருப்பில் வசித்தவர்கள். தற்போது அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.