\
கடலூர் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி

கடலூர் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி

கடலூர் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி
Published on: 

கடலூர் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பலியாகினர்.

கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அங்கு காலைப்பணியில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களைக் காப்பாற்ற சென்ற சிலருக்கும் அங்கிருந்த ரசாயன தெளிப்பின் காரணமாக கை, கால்களில் காயம் ஏற்பட்டதால் அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணம் என உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கரும்புகையுடன் ஆலை காட்சியளிக்கும் நிலையில் தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com