\
சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு: உயிர் தப்பிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை

சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு: உயிர் தப்பிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை

சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு: உயிர் தப்பிய குழந்தைக்கு தீவிர சிகிச்சை
Published on

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.

திருவாவடுதுறையை சேர்ந்த கட்டுமானப் பணியாளர் வெங்கட்ராமன் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் நேற்றிரவு வீட்டில் துங்கியிருக்கின்றனர். மழையில் நனைந்திருந்த வீட்டின் சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்திருக்கிறது. சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் இடிபாடுகளை அகற்றினர். இருப்பினும், படுகாயமடைந்த வெங்கட்ராமன், அவரது மனைவி கார்த்திகா ம‌றறும் இளையமகள் சாகித்யா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட மூத்த மகள் வர்ஷினி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com