தமிழ்நாடு
மதுரை அருகே பேருந்து- கார் மோதல்: 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை அருகே பேருந்து- கார் மோதல்: 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் புகைப்படக் கலைஞர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தது. அதே போல மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இரண்டும் 3 மணியளவில் புளியங்குளம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோதின.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 புகைப்பட கலைஞர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்களில் இரண்டு பேர், திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசன்னகுமார் (28 ), மதுரை பொன்மேனியைத் சேர்ந்த தினேஷ் (29), குணா என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.