\
ஊராட்சித் தேர்தல்:  திமுக அதிமுகவைச் சேர்ந்த 3 தம்பதியினர் அமோக வெற்றி

ஊராட்சித் தேர்தல்: திமுக அதிமுகவைச் சேர்ந்த 3 தம்பதியினர் அமோக வெற்றி

ஊராட்சித் தேர்தல்: திமுக அதிமுகவைச் சேர்ந்த 3 தம்பதியினர் அமோக வெற்றி
Published on

குன்றத்தூர் ஒன்றியத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட கனவன் - மனைவி வெற்றி பெற்றுள்ளனர்.

குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் மனோகரனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி சரஸ்வதி மனோகரனும் போட்டியிட்டனர். அதேபோல அதிமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவருக்கு மாலதி ஏசு பாதமும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது கணவர் ஏசுபாதமும் போட்டியிட்டனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இந்த இரண்டு தம்பதியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு தமிழ் அமுதனும், 12 வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு அவரது மனைவி மலர்விழி தமிழ் அமுதனும் போட்டியிட்டனர். போட்டியிட்ட இருவரும் வெற்றி பெற்றனர். குன்றத்தூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் 2 தம்பதியினரும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரு தம்பதியினரும் வெற்றி பெற்ற ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com