பள்ளி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வைப் போக்க அமைச்சர் புது ஐடியா

பள்ளி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வைப் போக்க அமைச்சர் புது ஐடியா

பள்ளி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வைப் போக்க அமைச்சர் புது ஐடியா
Published on

தனியார் பள்ளிகளை போல் தமிழக அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 3 வண்ணங்களில் சீருடைகள் மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 8 மாவட்டங்களை சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளை போல் தமிழக அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டு முதல் 3 வண்ணங்களில் சீருடைகள் மாற்றப்படும். இதன் மூலம் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ- மாணவியர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்காது என தெரிவித்தார். அதேபோல ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com