தூத்துக்குடி: குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு நேர்ந்த பரிதாபம்

தூத்துக்குடி அருகே உறவினர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Hospital
Hospitalpt desk

செய்தியாளர்: ராஜன்

தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன் - மீனா தம்பதியர். இத்தம்பதிக்கு சந்தியா (13), கிருஷ்ணவேணி (10) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் இசக்கி ராஜா (7) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் நேற்ற பிற்பகல் மூன்று குழந்தைகளும் தங்களது உறவினர்களுடன் பேரூரணியில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

Hospital
Hospitalpt desk

அப்போது உறவினர்களுக்குத் தெரியாமல் குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற மூன்று குழந்தைகளும் குளத்தில் மூழ்கி, மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மூன்று குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தட்டப்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com