அரசு கூர்நோக்கு இல்லத்தில் 3 சிறுவர்கள் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?

திருச்சியில் அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த, சிறுவர்கள் 3 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.
Sucide Attempt
Sucide Attemptpt desk

குற்ற வழக்கில் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள், திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு மாற்றப்பட்டனர். அவர்களை கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், சாதியை கூறி திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் சிறுவர்கள் புகார் அளித்தனர்.

boy
boyfile

ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், சிறார்கள் மூவரும் தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், 3 சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் காயங்களுடன் இருந்த சிறுவர்களை மருத்துவமனைக்கு அனுப்பாமல், மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com