தமிழ்நாடு
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஆவணங்கள் மாயம்: 3 பேர் கைது!
மதுரை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் காணாமல் போனதாக நீதிமன்ற ஊழியர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் தனித்தனி அறைகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்களைப் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில் குற்றவியல் தொடர்பான சில வழக்கு ஆவணங்கள் காணாமல் போயுள்ளது.

Arrest
இதுதொடர்பாக நீதிமன்ற ஊழியர்கள் சிலர், ‘நீதிமன்றத்தில் வழக்கின் ஆவணங்களைப் பாதுகாக்கக்கூடிய அறையில் இருந்து வழக்கின் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளன’ என உயர்நீதிமன்ற பதிவாளர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இவ்விவகாரத்தில் தொடர்புடைய நீதிமன்ற ஊழியர்களான ஜான்சன் மற்றும் பாலமுருகன், பிரித்திவிராஜ் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.