சார் ஆட்சியர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கைது 

சார் ஆட்சியர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கைது 

சார் ஆட்சியர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் கைது 
Published on

சென்னை கொளத்தூரில் சார் ஆட்சியர் வீட்டில் 131 சவரன் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி சார் ஆட்சியர் அல்லி வீட்டின் பூட்டை உடைத்து 131 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த தங்கமணி, சரவணக்குமார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த குமரேசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்ளைக்கும்பலின் தலைவனான தங்கமணி மாலை நேரத்தில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவார். அதன்பின் இரவுக்காட்சிக்காக திரையரங்கில் கூடும் மூவரும் கொள்ளைக்கான திட்டத்தை அங்கு தீட்டுவர். படம் முடிந்ததும் குறிவைத்த வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துவிட்டு தப்பிவிடுவர். கொள்ளை நடந்த இடம் மற்றும் அதற்கருகே உள்ள திரையரங்குகளின் சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை கண்டறிந்த காவல்துறையினர் மூவரையும் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com