\
தமிழகத்தில் ஒருநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் ஒருநாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,086ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் 1,06,514 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் இன்றைய ஒருநாள் கொரோனா பாதிப்பு 3,086ஆக உள்ளது. சென்னையில் நேற்று 663 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 590ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 14பேரும், அரசு மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 37,887ஆக உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 66,992 லிருந்து 56,002ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 14,051 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,37,265 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 654ஆக இருந்த நேற்றைய கொரோனா பாதிப்பு இன்று 569ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் 290ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 261ஆக குறைந்தது. திருப்பூரில் 221ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 193ஆக குறைந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com