கல்வி விருது வழங்கும் விழா | அரங்கத்திற்கு வருகை தந்தார் விஜய்!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பு செய்ய தவெக தலைவர் விஜய் தற்போது இந்நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்புதிய தலைமுறை

தமிழக வெற்றிக்கழகம் சார்பில், கடந்த 2023-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் முதற்கட்ட விழா சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், 2வது கட்ட விழாவானது இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற உள்ளது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

முன்னதாக முதற்கட்டமாக தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இருந்து 127 தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கடந்த ஜூன் 28 ம்தேதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (ஜூலை 3) இரண்டாம் கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு விருது வழங்கி சிறப்பு செய்ய, தவெக தலைவர் விஜய் தற்போது நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
"ஒரு சில அரசியல் கட்சிகளின் பொய்யான பிரச்சாரங்களை நம்பாமல்..?" - விஜய் பேச்சால் ஆர்ப்பரித்த அரங்கம்!

இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 107 தொகுதிகளில் இருந்து 642 மாணவ மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கவுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இதேபோல் இன்றைய தினமே புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளில் இருந்து 168 மாணவ மாணவியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி ஊக்கத் தொகை வழங்க உள்ளார் விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் விஜய்
”ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து விஜய் பேச்சு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com