\
2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி உயிரிழப்பு  - கொடூர சித்தி கைது

2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி உயிரிழப்பு - கொடூர சித்தி கைது

2வது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி உயிரிழப்பு - கொடூர சித்தி கைது
Published on

சென்னையில் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த முதல் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில்,பார்த்திபன் என்பவரது 6 வயது சிறுமி ராகவி. இந்தச் சிறுமி முதல் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இரண்டாவது மாடியிலிருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சிறுமியை குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும், வழியிலேயே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமியின் தாய் சூர்யகலா மீது சந்தேகமடைந்த சேலையூர் போலீசார் அவரிடம் கிடிக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி விசாரணை செய்ததாக தெரிகிறது. இதில் சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசியதாக சூர்யகலா ஒப்புக்கொண்டதால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யகலா சிறுமிக்கு இரண்டாவது தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com