\
2ஜி வழக்கில் கனிமொழி விடுதலை: இனிப்பு வழங்கிய ஸ்டாலின்..!

2ஜி வழக்கில் கனிமொழி விடுதலை: இனிப்பு வழங்கிய ஸ்டாலின்..!

2ஜி வழக்கில் கனிமொழி விடுதலை: இனிப்பு வழங்கிய ஸ்டாலின்..!
Published on: 

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், ஸ்டாலின் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி  நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளர்.

2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் டெல்லியில் தீர்ப்பு வழங்கப்பட்ட நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ஏராளமான திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் சென்னையிலும் ஸ்டாலின் இல்லத்தில் கூடிய ஏராளமான திமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி உற்சாகத்தில் திளைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com