“வயிறு வலிக்குதுன்னு துடிச்சாரு.. கொஞ்ச நேரத்துல செத்து போயிட்டாரு!”- கண்ணீருடன் கதறி அழும் பெண்கள்!

விஷச்சாராய விவகாரத்தில் சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராய் உயிரிழந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ளச்சாராய மரணம்
கள்ளச்சாராய மரணம்PT

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன அவர்களது குடும்பத்தினர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அடுத்தடுத்து 70க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் உயிருக்கு

ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மற்றும் சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தங்களது கணவர், சகோதரர்கள், மகன்களுக்கு என்ன ஆனதோ எனத் தெரியாமல் மருத்துவமனை வாசலில் அவர்களது குடும்பத்தினர் பதறிக்கொண்டிருக்க, சிகிச்சை பலனின்றி ஒவ்வொருவராய் உயிரிழந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாட்டையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com