தமிழ்நாடு
ரயில் பயணியிடம் கணக்கில் வராத ரூ.28 லட்சம் பறிமுதல்: இடுப்பில் மறைத்து வந்தது அம்பலம்
ரயில் பயணியிடம் கணக்கில் வராத ரூ.28 லட்சம் பறிமுதல்: இடுப்பில் மறைத்து வந்தது அம்பலம்
ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த ரயில் பயணி இடுப்பில் மறைத்து கணக்கில் காட்டப்படாத 28 லட்சம் ரூபாய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து ரயில் மூலம் மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஹைதராபாத்திலிருந்து அதிகாலை சென்னை வந்த ரயில் பயணிகளிடம் சோதனை செய்தபோது, குண்டூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் இடுப்பில் 28 லட்சம் ரூபாயை மறைத்து எடுத்து வந்ததாக தெரிகிறது. அவரை விசாரித்ததில் கணக்கில் வராத பணம் என்பதால், 28 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.