\
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டு சிறை

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டு சிறை

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 27 ஆண்டு சிறை
Published on

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 27ஆண்டுகள் சிறை தண்‌டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 மற்றும் 10 வயது சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக முத்தையா என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்த‌னர். 

இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி புலோரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதாக முத்தையாவுக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, முத்தையாவை காவல்துறையி‌னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com