\
சென்னையில் கொரோனாவுக்கு 27 வயது இளம்பெண் உயிரிழப்பு..!

சென்னையில் கொரோனாவுக்கு 27 வயது இளம்பெண் உயிரிழப்பு..!

சென்னையில் கொரோனாவுக்கு 27 வயது இளம்பெண் உயிரிழப்பு..!
Published on

சென்னையில் உயிரிழந்த 27 வயது இளம் பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருந்தது சோதனை முடிவில் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு 2,162 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் கொரோனா பாதிப்புக்கு மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் அப்பெண் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அதிகமான உதிரப்போக்கு காரணமாக ஏப்ரல் 27ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே கொரோனா சோதனை செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது சோதனைக்கான முடிவுகள் வந்துள்ளது.அதில் உயிரிழந்த இளம் பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 27 வயது இளம் பெண் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com