சென்னையில் மட்டும் இன்று 266 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியில்..?

சென்னையில் மட்டும் இன்று 266 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியில்..?

சென்னையில் மட்டும் இன்று 266 பேருக்கு கொரோனா : மாவட்ட ரீதியில்..?
Published on

சென்னையில் இன்று 266 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் தமிழகத்தில் 527 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் சென்னையில் மட்டும் இன்று 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 1724 ஆக உயர்ந்துள்ளது. இதில் 267 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 பேர் இறந்துள்ளனர். தற்போது 1438 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை காணலாம். அரியலூர் - 6, செங்கல்பட்டு - 48, கடலூர் - 122, திண்டுக்கல் - 10, கரூர் - 1, மதுரை - 1, பெரம்பலூர் - 25, ராமநாதபுரம் - 1, ராணிப்பேட்டை - 3, தென்காசி - 9, தஞ்சாவூர் - 1, திருப்பத்தூர் - 1, திருவள்ளூர் - 9, திருவண்ணாமலை - 11, திருவாரூர் - 2, திருச்சி - 4, விழுப்புரம் - 49, விருதுநகர் - 2. தமிழகத்தில் மொத்தம் இதுவரை 1,409 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 2,107 பேர் சிகிச்சையில் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com