தமிழ்நாடு
இரண்டு எஸ்ஐ உட்பட 26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - காரணம் என்ன?
தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆணையர் சங்கர் தலைமையில் குட்கா விற்பனை தொடர்பான சோதனை நடைபெற்றது. இதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குட்கா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையர் சங்கர் நடவடிக்கை எடுத்துள்ளார். குட்கா விற்பனை செய்பவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை புரியும் காவலர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரித்துள்ளார்.