தமிழ்நாடு
திண்டுக்கல்லில் 2,500 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுபிடிப்பு
திண்டுக்கல்லில் 2,500 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுபிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் 2500 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாடியூர் என்ற ஊரின் நடுவே உள்ள கோட்டைமேடு என்ற இடத்தை தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் 3 கட்டங்களாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் 3 ஏக்கர் பரப்பளவில் பாறாங்கற்களால் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. முதுமக்கள் தாழிகள், கரும்சிவப்பு பானை ஓடுகள், பெண்களின் காதணிகள், மண்பாண்டங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.