\
முன்விரோதம்: சென்னையில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை!

முன்விரோதம்: சென்னையில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை!

முன்விரோதம்: சென்னையில் 24 வயது இளைஞர் வெட்டிக்கொலை!
Published on

சென்னையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகரில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி அருகேயுள்ள கொட்டகை ஒன்றில் நேற்றிரவு கிரி (24) என்ற இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியோடியது. மேலும், ஆனந்தன் என்பவருக்கு காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டதை அடுத்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பள்ளிக்கரணை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் அரிவாள் ஒன்றை பறிமுதல் செய்தனர். உயிரிழந்த கிரியின் தம்பிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது தம்பிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தனிப்படைகளை அமைத்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com