நகை திருட்டு வழக்கு ஒன்றில் சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், சூர்யா ஆகியோர் தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் சத்தியவாணன் உயிரிழந்தார்.
பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் சேவல் கட்டு மூளை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை பாலியல் புகார் ஒன்று தொடர்பாக பரமத்தி வேலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் காவல் துறையினரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு வீடு திரும்பினார். அடுத்த நாள் அதிகாலையில் அவர் உயிரிழந்தார்
தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி நபரான பிரபாகரன் என்பவர், நகை திருட்டு வழக்கில் கைதான நிலையில் சிறையில் மரணம்
திருநெல்வேலியில் ஆமீன் புரத்தை சேர்ந்த சுலைமான் என்பவர் திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மயங்கி விழுந்து மரணம்.
சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் என்பவர் உயிரிழந்தார். புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார்.
திருவண்ணாமலை:தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனையில் ஈடுபடுவதகாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிறையில் மரணம்.
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணம். நகை திருட்டு வழக்கில் கைதான அவர் காவல்நிலையத்திலேயே உயிரிழப்பு.
மதுரை மாவட்டம் சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த வேடன் என்பவர், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மரணம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் மரணம்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2022-ல் 11, 2023-ல் 1, 2024-ல் 10, 2025-ல் 2 மரணங்கள் என மொத்தமாக 24 லாக்கப் மரணங்கள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்திற்கெல்லாம் என்ன நீதி கிடைத்திருப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதுபோன்ற லாக்கப் மரணங்கள் இதற்குபிறகு நடக்கூடாது என்பதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.