இலங்கைக்கு கடத்த முயன்ற 24 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 24 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 24 கிலோ போதைப் பொருள் பறிமுதல்
Published on

தூத்துக்குடி மொட்டைகோபுரம் பகுதியில் கட‌ல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஹஷிஷ் என்ற 24 கிலோ போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அப்பகுதியில் இரு பிரிவாக மறைந்து நின்றிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவைக் கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து, ஆட்டோவில் வந்த நபர் தப்பியோடியிருக்கிறார். இந்நிலையில், நடுக்கடலில் வந்த படகினை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில், படகில் வந்த நபர்களும் கடலில் குதித்து தப்பி இருக்கின்றனர்.

ஆட்டோவை சோதனையிட்டதில் ஹஷிஷ் போதைப்பொருள் இருப்பது தெ‌ரியவந்தது. ஆட்டோவில் கொண்ட வந்த போதைப் பொருளை படகுக்கு மாற்றி கடத்தவிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com