காவல்துறையினர் பாதுகாப்புpt desk
தமிழ்நாடு
தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு அச்சுறுத்தல் - 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தலின் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர்: M.ராஜாராம்
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் உள்ளதாக சிலர் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு பணம் கேட்ட மிரட்டியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தருமபுரம் ஆதீனம் மடம்pt desk
இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செய்யூரைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தருமபுர ஆதீன திருமடத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இரண்டு பேர் மாறிமாறி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.