\
தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை 

தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை 

தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை 
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 24 மணி நேரமும் சென்னையில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், பூந்தமல்லி, மாதாவரம், கே.கே.நகர் ஆகிய 5 இடங்களிலிருந்து 10 ஆயிரத்து 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது. சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 10 ஆயிரத்து 940 பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் சென்னையில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர் 26 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com