கன்னியாகுமரி
கன்னியாகுமரிpt web

234 | தொகுதிவாரியாக தமிழ்நாடு.. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் முழு பின்னணி

தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அதன் வரலாறு, ஜனநாயக பிணைப்பு, சமீபத்திய தேர்தல் முடிவுகள், சமூக தரவுகள் மற்றும் அரசியல் மாறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுருக்கமான அறிமுகத்தைக் கொடுக்கும் தொகுப்பு.
Published on

தென்னிந்தியாவின் கடைசி முனையில், மூன்று கடல்களும் சந்திக்கும் புள்ளியில், மக்களால் புனிதத் தலமாகக் கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, தமிழக அரசியல் வரைபடத்தில் தனித்துவம் வாய்ந்த ஒன்று. இந்தத் தொகுதி, கன்னியாகுமரி பேரூராட்சி மட்டுமல்லாமல், தேரூர், மருங்கூர், சுசீந்திரம், மைலாடி, அழகப்பபுரம், புத்தளம், தெங்கம்புத்தூர், தெந்தாமரைக்குளம், கொட்டாரம், அஞ்சுகிராமம் மற்றும் அகஸ்தீஸ்வரம் போன்ற முக்கிய பேரூராட்சிகளைக் கொண்டுள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை (2021 சட்டமன்ற தேர்தலின்படி)

  • மொத்த வாக்காளர்கள்: 2,79,721

  • ஆண் வாக்காளர்கள் : 1,40,482

  • பெண் வாக்காளர்கள் : 1,39,239

தொகுதியின் சமூகக் கட்டமைப்பு:

  • பிள்ளைமார் – 20%

  • நாடார் – 17%

  • கிறித்தவ நாடார் – 14%

  • மீனவர் (கிறித்தவர்களையும் சேர்த்து) – 13%

  • ஆதி திராவிடர் – 13%

மாவட்டத்தின் வரலாற்றுப் பின்னணி:

திருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற 1956ல் உருவாக்கப்பட்ட மாநில சீரமைப்புகக் குழு குழு முடிவு செய்தது.

1956 – நவம்பா் முதல் நாளன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

தொகுதியின் தேர்தல் வரலாறு

1957 முதல் 2021 வரை கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 17 முறை சட்டமன்றத் தேர்தல் நடந்திருக்கிறது.

அதிமுக – 7 முறை (1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2021)

திமுக – 5 முறை (1971, 1989, 1996, 2006, 2016)

இந்திய தேசிய காங்கிரஸ் – 2 முறை (1962, 1967)

இத்தொகுதியில் தளவாய் சுந்தரம் (அதிமுக) மற்றும் என். சுரேஷ்ராஜன் (திமுக) இருவரும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர். மற்ற பலர் ஒரே முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

சமீபத்திய தேர்தல் நிலவரம் 2021 சட்டமன்றத் தேர்தல்:

  • தளவாய் சுந்தரம் (அதிமுக) – 1,09,745 வாக்குகள்

  • ஆஸ்டின் (திமுக) – 93,532

  • சசிகலா (நாதக) - 14,140

  • செல்வக்குமார் (மநீம) - 3,106

வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் – 16,213

2024 மக்களவைத் தேர்தல் (அதே சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட வாக்குகள்):

  • காங்கிரஸ் – விஜய் வசந்த் – 96,189

  • பாஜக – பி. ராதா கிருஷ்ணன் – 77,658

  • அதிமுக – பசிலியன் நசரேத் – 15,767

  • நாம் தமிழர் – மரிய ஜெனிஃபர் – 11,116

முதலிடத்திற்கான வாக்கு வித்தியாசம் - 18,531

அதிமுக, 2021-ல் தொகுதியை வென்றிருந்த போதும், 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. 2021ல் அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்தாலும், 2024 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. விஜய் வசந்த், 2024-ல் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 2021-இல் திமுக பெற்ற வாக்குகளைவிட குறைவாகவே பெற்றிருக்கிறார்.

மிக முக்கியமாக சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் இடையிலான வாக்காளர் மனநிலை வேறுபாடுகளை தெளிவாக படம்பிடித்துக்காட்டுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com