இணை நோய்கள் இல்லாமல் சென்னையில் 23 வயது இளைஞர் கொரோனாவுக்கு உயிரிழப்பு!
இணை நோய்கள் இல்லாமல் சென்னையில் 23 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒருநாளில் மட்டுமே 25 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், மூன்று பேர் இணை நோய்கள் இல்லாமலேயே உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும், தனியார் மத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவரும் இறந்துள்ளனர்.
குறிப்பாக, அந்த மூவரில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 12 ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் ஏற்கனவே, 2.482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2,564 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 54,315 ஆக அதிகரித்துள்ளது.