தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு: 23 ரயில் சேவைகள் இன்று ரத்து

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக, நெல்லையில் இருந்து செல்லும் 23 ரயில் சேவைகள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
rail
railpt desk

நெல்லை - செங்கோட்டை மற்றும் செங்கோட்டை - நெல்லை இடையேயான பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நெல்லை - திருச்செந்தூருக்கு இடையேயான ரயில் சேவை இரு மார்க்கங்களிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளம்
திருநெல்வேலியில் அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளம்புதிய தலைமுறை

நெல்லை - தூத்துக்குடி, நெல்லை - நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் சேவை, இரு மார்க்கங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பாலக்காடு - நெல்லை மற்றும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் நிறுத்தப்படும். இதேபோல் திருச்செந்தூர் - பாலக்காடு இடையேயான ரயில் சேவை, திண்டுக்கலில் இருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் நெல்லைக்கு வராது என்றும், அது மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு தென்காசி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com