தமிழ்நாடு
கோவையில் 23 பேர் டெங்கு காய்ச்சல்: 183 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
கோவையில் 23 பேர் டெங்கு காய்ச்சல்: 183 பேருக்கு வைரஸ் காய்ச்சல்
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 23 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 183 பேருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் பரவும் இடங்களில் அரசு சார்பில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிபுணர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் சிகிச்சை வழங்கப்படுகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க கூடுதலாக ரத்தம் தேவைப்படுவதால், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.