போராட்டத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை, பணிக்கு திரும்பும்படி அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அரசின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது. அதற்கான கெடு இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்தது.
இந் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும், பள்ளிக் கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.