\
நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனை

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனை

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனை
Published on

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று அமோக விற்பனை நடந்துள்ளது. ஒரே நாளில் 217.96 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை போதும் முடக்கம் தமிழகம் முழுவதும் அமலில் உள்ள காரணத்தினால் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட மாட்டாது இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது குடிப்போர் அதிக அளவில் மதுகளை வாங்கி குவிந்துள்ளனர்.

அதிகப்படியாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாயும்,திருச்சி மண்டலம் 42.59 கோடிக்கும், கோவை மண்டலம் 41.28 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது., மிகவும் குறைவாக சேலம் மண்டல 40.85 கோடி ரூபாய்க்கு மதுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com