ஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

ஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

ஈரானில் தவிக்கும் 21 மீனவர்கள் மீட்பு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்
Published on

ஈரானில் சிக்கித் தவிக்கும் 21 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள அவர், ஈரானின் நகிதாகி பகுதியில் சிக்கிய 21 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளார்கள் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த முயற்சியின் பலனாக மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக உள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். மீனவர்கள் நாளை மறுநாள் முதல் சென்னை திரும்புவார்கள் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்கள் ஈரானில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். ஈரான் நாட்டை சேர்ந்த முதலாளி ஒருவருக்கு சொந்தமான விசைப்படகில் தான் அவர்கள் மீன்பிடித் தொழில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு உரிய கூலியை முதலாளி வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர்கள் உண்ண உணவு இல்லாமல் கூட சிரமப்பட்டனர். இதனையடுத்து மீனவர்கள் இதுகுறித்து தங்களது உறவினர்களிடம் தெரிவித்தனர். அதன்பேரில் மீனவர்களின் உறவினர்கள், ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். தமிழக முதலமைச்சர் பழனிசாமியும், பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதன்பேரில் தற்போது ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com