2026 சட்டமன்ற தேர்தல்| தீவிரம் காட்டும் பாஜக.. தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் பாஜக தீவிரம் காட்டி, முக்கிய தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர். இது பாஜகவின் தேர்தல் வெற்றிக்கான முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ள தொகுதிகளுக்கு தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், உதகை, திருப்பூர் வடக்கு, வால்பாறை உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும், தமிழிசை சௌந்தரராஜன் கும்மிடிப்பூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும், பொன்.ராதாகிருஷ்ணன் தென்காசி, பரமக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கும், வானதி சீனிவாசன் திருப்பூர் தெற்கு, குன்னூர், கோவை தெற்கு ஆகிய 3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

