“2024 நாடாளுமன்ற தேர்தல் நமக்கு 4-வது போர்” - அமைச்சர் உதயநிதி பேச்சு #VideoStory
சிந்தாதிரிப்பேட்டையில் முத்தரையர் சமூகத்தின் தலைமை அலுவலகத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து அங்கு பேசிய அவர், “எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்கள். கலைஞரை விட, சமூக நீதியை காக்க ஸ்டாலின் செயல்படுவதால்தான் அவரை பார்த்து பயப்படுகின்றனர். கடந்த 2019 நாடளுமன்ற தேர்தல், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தல், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தல் என மூன்று போர்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. வர இருக்கிற 2024 நாடளுமன்ற தேர்தல் 4வது போர். அதிலும் திமுக வெற்றி பெறும்.
கலைஞர், முத்தரையர் சமூக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார். அரசுப் பணியில் 20 சதவீத இடஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் முத்தரையர் சமூகத்தை சேர்த்தது உள்ளிட்டவற்றை கலைஞர் கருணாநிதி செய்துள்ளார்" என்று பேசினார்