மக்களவை தேர்தல் 2024க்கு திமுக தேர்தல் பணிக்குழு ரெடி!

மக்களவை தேர்தல் 2024 ஆம் ஆண்டிற்கான திமுகவின் தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது திராவிட முன்னேற்றம் கழகம்.

2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், 2024-ன் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவுள்ள சூழலில் பல்வேறு கட்சிகள் அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் திமுகவும் தங்களது தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது. இந்த தேர்தல் பணிக்குழுவில் யார் யார் இடம் பெற்றுள்ளனர் என்ற அறிக்கை தனது சமூகவலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளது திமுக.

அந்தவகையில் மூன்று குழுக்களை அமைத்துள்ளது திமுக. இதன்படி தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவுக்கு கே.என்.நேருவும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுக்கு கனிமொழியும், தொகுதிப்பங்கீடு பற்றி கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவுக்கு டி.ஆர்.பாலுவும் தலைமை தாங்க உள்ளனர். மேலும் இந்தக் குழுவில் மேயர் பிரியா மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் பின்வரும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 • கே.என்.நேரு

 • ஆர்.எஸ்.பாரதி

 • எ.வ.வேலு

 • தங்கம் தென்னரசு

 • உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தலைமை: கனிமொழி கருணாநிதி எம்.பி.,

உறுப்பினர்கள்:

 • டி.கே.எஸ்.இளங்கோவன்

 • ஏ.கே.எஸ்.விஜயன்

 • பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

 • டி.ஆர்.பி.இராஜா

 • கோவி.செழியன்

 • கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.

 • சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ.

 • எம்.எம்.அப்துல்லா எம்.பி.

 • மருத்துவர் எழிலன் நாகநாதன்,எம்.எல்.ஏ.

 • மேயர் பிரியா

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

குழு தலைவர் :திரு. டி.ஆர்.பாலு

குழு உறுப்பினர்கள்

 • கே.என்.நேரு

 • இ.பெரியசாமி

 • க. பொன்முடி

 • ஆ. இராசா, எம்.பி.

 • திருச்சி சிவா, எம்.பி.

 • எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com