மீட்கப்பட்ட 2015 மீனவர்கள் பட்டியல் வெளியீடு: அமைச்சர் ஜெயக்குமார்

மீட்கப்பட்ட 2015 மீனவர்கள் பட்டியல் வெளியீடு: அமைச்சர் ஜெயக்குமார்

மீட்கப்பட்ட 2015 மீனவர்கள் பட்டியல் வெளியீடு: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

ஒகி புயலின் போது காணாமல் போய் இதுவரை மீட்கப்பட்ட 2015 தமிழக மீனவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் காரணமாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒகி புயலின் போது காணாமல் போய் இதுவரை மீட்கப்பட்ட 2015 தமிழக மீனவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும், ஆயிரத்து 112 மீனவர்களின் பெயர் பட்டியல் நாளை வெளியிடப்படுமென்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

காணாமல் போன 56 படகுகளை கண்டறியும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதே போல் காணாமல் போன மீனவர்களை தேடுவதில், கடலோர காவல் படையினருடன் மீனவர்கள் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com