மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200; எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200; எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200; எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகராட்சி

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம். வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.

சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தலா 1.50 லட்சம் தினசரி அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் தினசரி 1.25 லட்சம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாநகர் மண்டலத்தில் விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 முறைக்கு மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் சீல் வைக்கப்படும். கொரோனா குவாரண்டன் விதியை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com