திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்?
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனா நோய்ப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,535 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் மேலும் 279 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் சென்னையில் மட்டும் 3,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் திருவள்ளூர் இரண்டாம் இடத்தில் உள்ளது.