மறைந்த பின்பும் இயங்கும் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு !

மறைந்த பின்பும் இயங்கும் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு !
மறைந்த பின்பும் இயங்கும் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு !

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகும் அவருடைய வங்கி கணக்கு தற்போது வரை செயல்படுவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்தார். அவர் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு ஆணைப் பிறப்பித்தது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வருமான வரி அதிகாரிகள் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் வருமான வரி நிலுவைக்காக இணைக்கப்படுள்ளதாக தகவல் வெளியிட்டனர். இந்த தகவல் அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2007 ஆம் ஆண்டு ஜெயலலிதா வருமான வரிக்கு 16 கோடி ரூபாய் நிலுவை வைத்ததற்காக அவருடைய வேதா இல்லம் உட்பட 3 சொத்துகள் இணைக்கப்பட்டதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் தற்போது ஜெயலலிதாவின் வங்கி கணக்கு தற்போது வரை இயங்குவதாக மற்றும் ஒரு தகவலை வருமான வரி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் அவரின் வணிகவலாகங்கள் மற்றும் வீட்டு வாடகை தொகை மற்றும் கோடநாடு எஸ்டேட் ஆகியவற்றின் மூலம் வரும் தொகைகள் இந்த வங்கி கணக்கில் செலுத்தபடுவதாக தகவல் தெரிவித்தனர்.

மேலும் வருமான வரி சட்டத்தின்படி நான்கு சொத்துக்கள் இணைக்கப்பட்டவுடன் அவை பற்றி துணை பதிவாளர் இடம் தகவல் அளிக்கப்பட்டதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனென்றால் வருமான வரி சட்டத்தின்படி அந்த நான்கு சொத்துகளும் வருமான வரி நிலுவை தொகை செலுத்தும் வரை விற்கமுடியாது.

இந்த வருமான வரி நிலுவை குறித்து வருமான வரி அலுவலகம் பல முறை ஜெயலலிதாவிற்கு தகவல் அனுப்பியும் அவர் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல இந்த வருமான வரி நிலுவை தொகை குறித்து ஜெயலலிதா தான் போட்டியிட்ட 2011 மற்றும் 2016 தேர்தல்களின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com