\
விருதாச்சலம்: டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

விருதாச்சலம்: டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

விருதாச்சலம்: டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு
Published on

விருதாச்சலம் அருகே டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கருவேப்பிலைங்குறிச்சியில் தன்யஸ்ரீ என்ற 2வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும், குழந்தையை காப்பாற்ற வந்த தாயும் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com