ஈரோடு | சட்டவிரோத கல்குவாரியில் வெடி விபத்து - இரு தொழிலாளர்கள் உடல்சிதறி உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே கல்குவாரி வெடிபத்தில் சிக்கிய இரு தொழிலாளர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர்.
பெருந்துறையைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி ஈஸ்வரி. இவரது பெயரில், டி.என்.பாளையத்தில் சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டு வந்தது. 2015ஆம் ஆண்டே உரிமம் முடிவடைந்த நிலையில், அக்குவாரி தொடர்ந்து இயங்கி வந்தது. 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் பணிபுரிந்து வந்தனர்.
இந்தநிலையில், அந்த கல்குவாரியில், வெடிவைத்து பாறையை உடைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில் அங்கிருந்த இரு தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
காவல் துறையினர் நிகழ்விடத்திறகு சென்று வெடி விபத்தில் உயிரிழந்த இருவர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான உரிமையாளர்களை அவர்கள் தேடி வருகின்றனர்