\
ஏரியில் முழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

ஏரியில் முழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

ஏரியில் முழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு
Published on: 

உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு சிறுவர்கள் ஏரி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சித்தானங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் மகன் டேனியல். பழனிவேல் மகன் அசோக்குமார். இருவரும் ஏரிக்கு விளையாட சென்றனர். ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது, பள்ளம் இருந்த இடத்தில் தடுமாறி விழுந்த இவர்கள் நீரில் முழ்கி தத்தளித்துள்ளனர். அருகில் இருந்து ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டவுடன் பதறிப்போய் கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கிராம மக்கள் நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டபோது இரண்டு பேருமே இறந்து விட்டனர். டேனியல் 3-ஆம் வகுப்பு படித்துவந்தார். அசோக்குமார் 6-ஆம் வகுப்பு மாணவர் ஆவார்.

ஏரியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com