பள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

பள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

பள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை
Published on

கோவையில் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவரை காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் இருவரின் மகன்களான கேதல் பால்டா த்தாரியா மற்றும் ‌வருண் சிங் ரத்தோர் இருவரும் சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று காலை பள்ளி சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. அவர்களை தேடிப்பார்த்து தக‌வல் எதுவும் தெரியாத நிலையில், நேற்றிரவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்கள் இருவரும் சைக்கிளில் செல்லும் சிசிடிவி காட்சி கிடைத்துள்ளதால் அதன் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com