வகுப்பில் இடம் மாறி உட்கார வைத்ததால் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி: ஒருவர் பலி
சேலத்தில் காணாமல் போன 2 மாணவிகள் இன்று விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோழிகளான கவிஸ்ரீ மற்றும் ஜெயராணி ஆகியோர் அரிசிப்பாளையத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தனர். வகுப்பில் இடம் மாறி உட்கார வைத்ததால் இருவரும் மனமுடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து இரு மாணவிகளும் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் மாணவிகளை தேடிய நிலையில், இருவரும் இன்று சேலத்திலுள்ள உணவு விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்தனர். ஜெயராணி உயிரிழந்த நிலையில், கவிஸ்ரீக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.