தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.. தேர்வெழுதும் 8.27 லட்சம் பேர்!
தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. 8.27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்புபொதுத் தேர்வு திங்கள்கிழமையான இன்றுமுதல் தொடங்குகிறது. ஏழு லட்சத்து 99 ஆயிரத்து 692 மாணவ, மாணவிகள், 27ஆயிரத்து 783 தனித்தேர்வர்கள் எனமொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதற்காக தமிழ்நாடு முழுவதும் மூவாயிரத்து 412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடத்தப்படும் நிலையில், இந்தாண்டு முதல் கணக்குப்பதிவியல் பாடம் எழுதுவோர் சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரம்தேர்வறைக்கு செல்போன்கொண்டுசெல்ல அனுமதியில்லை.
தேர்வின்போது மாணவர்கள் ஒழுங்கீ னசெயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

