தமிழ்நாடு
டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 காவலர்களுக்கு கொரோனா - கட்டுப்பாட்டு அறை மூடல்
டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 காவலர்களுக்கு கொரோனா - கட்டுப்பாட்டு அறை மூடல்
டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 உளவுத்துறை காவலர்கள் உட்பட இன்று மேலும் 4 காவலர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பொதுமக்களுக்கு மட்டுமல்லாது அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வரும் மருத்துவர்கள், காவலர்களுக்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக உறுதியாகி வருகின்றது.
அந்த வகையில், சென்னை புதுப்பேட்டை ஆயுயப்படை பெண் காவலருக்குக் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். இதேபோல், டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை கட்டுப்பாட்டு அறை காவலர்கள் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பெரவள்ளூர், மற்றொருவர் மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர்கள் ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஓட்டேரி காவல் நிலைய காவலர் ஒருவர் என மொத்தம் இன்று ஒரே நாளில் 4 காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேலும் தொற்று பரவாமல் இருக்க டிஜிபி அலுவலகத்தில் உள்ள உளவுத்துறை சென்னை நகரக் கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டது.